தனிநபர் தகவல்களை காவல்துறையினர் இலகுவாக பெறுவதை அனுமதிக்கும் சட்டமூலத்தை மாற்றத் தயாராக உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி நாடாளுமன்ற குழுவில் வியாழக்கிழமை (09) இந்தத் தகவலை வெளியிட்டார்.
கனடியர்கள் குறித்த தனிநபர் தகவல்களை காவல்துறையினர் எளிதாகப் பெறுவதற்கு உதவும் வகையில் இந்த சட்டமூலம் அமைகிறது.
முன்மொழியப்பட்ட இந்த எல்லைப் பாதுகாப்புச் சட்டத்தைத் மாற்றத் தயாராக இருப்பதாக அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கூறினார்.
தகுந்த மாற்றம் மூலம் இந்த சட்டம் நாடாளுமன்ற ஒப்புதலை பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
