தேசியம்
செய்திகள்

ஒரு புதிய தொழில்துறை சகாப்தத்திற்கான தொலைநோக்குப் பார்வை?

கனடாவை ஒரு புதிய தொழில்துறை சகாப்தத்திற்கு எடுத்து செல்வதற்கான தொலைநோக்குப் பார்வை மத்திய Liberal அரசாங்கத்திடம் உள்ளது என தொழில்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இதற்காக புதியதொரு உள்நாட்டு உத்தியை ஆளும் Liberal அரசாங்கம் அறிமுகப்படுத்துவதாக தொழில்துறை அமைச்சர் Melanie Joly வியாழக்கிழமை (09) தெரிவித்தார்.

தொழில் முயற்சிகளை பாதுகாக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், உலகளாவிய முதலீடுகளையும், திறமைகளையும்  ஈர்க்கவும் இந்த புதிய உள்நாட்டு உத்தியை அறிமுகப்படுத்துவதாக அவர் கூறினார்.

கனடாவின் புதுப்பிக்கப்பட்ட தொழில்துறை உத்தியை விவரித்த அமைச்சர், Liberal அரசாங்கம் எவ்வாறு முக்கிய துறைகளை வலுப்படுத்த விரும்புகிறது என்பதையும் விளக்கினார்.

அமெரிக்க ஜனாதிபதியின் வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறைகள் இதில் அடங்குவதாக அவர் கூறினார்.

இந்தத் தொழில்துறைகள் வீழ்ச்சியடையாமல் இருப்பாதை உறுதிப்படுத்துவோம் எனவும் தெரிவித்த Melanie Joly, எங்கள் தொழிலாளர்கள்,  தொழில்கள், தேசத்திற்காக இதைச் செய்ய உறுதியாக உள்ளதாக கூறினார்.

உலகளாவிய உறுதியற்ற தன்மைக்கு  மத்தியில், கனடிய இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கான ஒரு வழியாக இந்த உத்தி அமைவதாகவும் அவர் கூறினார்.

Related posts

5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசி தகுதியில் மாற்றம்

Lankathas Pathmanathan

Saskatchewan முன்னாள் வதிவிட பாடசாலையின் தளத்தில் 14 சாத்தியமான புதைகுழிகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

கனடிய பொருட்கள் மீதான அமெரிக்க வரி எச்சரிக்கை தீவிரமானது: Justin Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment