தேசியம்
செய்திகள்

காசா அமைதி முன்னெடுப்பு குறித்து Mark Carney நம்பிக்கை

காசா அமைதி முன்னெடுப்பு குறித்து கனடிய பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

காசா அமைதி முன்னெடுப்புகளுக்கு அடுத்த 48 மணி நேரம் பிரதானமானது என Mark Carney தெரிவித்தார்.

அமெரிக்காவால் முன்னெடுக்கப்படும் காசா அமைதித் திட்டத்திற்கு எவ்வாறு  ஆதரவு வழங்க முடியும் என்பதை தனது அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர்   கூறினார்.

“அடுத்த 48 மணிநேரம் மிக முக்கியமானது” என இந்த அமைதி முன்னெடுப்புகள் குறித்து வியாழக்கிழமை (09) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் Mark Carney தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தை முன்னெடுப்பதற்கு உழைத்த அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, கத்தார், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளுக்கும் Mark Carney நன்றி தெரிவித்தார்.

Related posts

குழந்தைகளை குறி வைத்த பாலியல் மிரட்டல் குற்றச்சாட்டில் கனடிய தமிழருக்கு அமெரிக்காவில் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Lankathas Pathmanathan

Louis Plamondon: நீண்ட கால தொடர்ச்சியான சேவைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan

மேம்படுத்தப்பட்ட சலுகையுடன் தொழிற்சங்கத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை: முதல்வர் Ford

Lankathas Pathmanathan

Leave a Comment