தேசியம்
செய்திகள்

TTC பேருந்தின் கீழ் சிக்கிய பெண் மரணம்

TTC பேருந்தின் கீழ் சிக்கிய பெண் மரணமடைந்த சம்பவம் Royal York புகையிரத நிலையத்தில் நிகழ்ந்தது.

Toronto-வின் மேற்கு பகுதியில் உள்ள TTC நிலையத்தில் பேருந்தின் கீழ் சிக்கிய ஒரு பெண் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை (06) பிற்பகல் 1:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

Royal York புகையிரத நிலையத்தில் உள்ள பேருந்து நிறுத்த பகுதியில் அந்தப் பெண் ஒரு வாகனத்தின் கீழ் சிக்கிக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பலியான பெண்ணின் வயது உள்லிட்ட விபரங்கள் வெளியாகாத நிலையிலும், அவர் ஒரு வயோதிபர் என அவசர சிகிச்சை பிரிவினர் தெரிவித்தனர்.

பேருந்தின் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த TTC தலைமை நிர்வாக அதிகாரி Mandeep S. Lali, இந்தத்  துயர சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்கு Toronto காவல்துறையினருடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக கூறினார்.

Related posts

Ontario மாகாண சபை தேர்தலில் தமிழர்கள் – செந்தில் மகாலிங்கம்

Lankathas Pathmanathan

ஒவ்வொரு நாடும் அதன் சொந்த எல்லைக் கொள்கைகளை அமைக்க வேண்டும்: பிரதமர் Trudeau

Gaya Raja

Toronto-வில் கடுமையான இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment