தேசியம்
செய்திகள்

ஐந்து மாகாணங்களில் அடிப்படை ஊதியம் அதிகரிப்பு!

ஐந்து மாகாணங்கள் அடிப்படை ஊதியத்தை அதிகரித்துள்ளன.

Ontario, Manitoba, Saskatchewan, Nova Scotia, Prince Edward Island ஆகிய மாகாணங்களில் ஊதிய அதிகரிப்பு புதன்கிழமை (01) முதல் நடைமுறைக்கு வருகிறது.

கனடியர்கள் அதிக வாழ்க்கைச் செலவீனங்களை எதிர்கொள்ளும் நிலையில் இந்த அதிகரிப்பு நடைமுறைக்கு வருகிறது.

பின்வரும் மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கிறது:

  • Ontario: அடிப்படை ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு $17.20 இலிருந்து 40 சதங்கள் அதிகரித்து $17.60 ஆகிறது;
  • Prince Edward Island: அடிப்படை ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு $16 இலிருந்து 50 சதங்கள் அதிகரித்து $16.50 ஆகிறது;
  • Nova Scotia: அடிப்படை ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு $16.50 ஆகிறது;
  • Manitoba: அடிப்படை ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு $15.80 இலிருந்து 20 சதங்கள் அதிகரித்து $16 ஆகிறது;
  • Saskatchewan: அடிப்படை ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு $15 இலிருந்து 35 சதங்கள் அதிகரித்து $15.35 ஆகிறது.

இந்த ஆண்டு Alberta மாகாணத்தைத் தவிர, அனைத்து மாகாணங்களும் பிராந்தியங்களும் அடிப்படை ஊதியத்தை அதிகரித்துள்ளன.

புதன் நடைமுறைக்கு வரும் ஊதிய அதிகரிப்பு Alberta-வை கனடாவில் மிகக் குறைந்த ஊதியத்தைக் கொண்ட மாகாணமாக மாற்றியுள்ளது.

2018-ஆம் ஆண்டு முதல் Alberta அடிப்படை ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு $15 என்ற நிலையில் இருந்து மாற்றவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Related posts

COVID விதிகளை மீறியதற்கு மன்னிப்பு கோரிய NDP தலைவர்

Gaya Raja

New Brunswick கல்வி அமைச்சர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan

Toronto காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தப்பட்டார்!

Lankathas Pathmanathan

Leave a Comment