September 14, 2026
தேசியம்
செய்திகள்

இஸ்ரேலுடனான உறவை மதிப்பீடு செய்கிறோம்: அனிதா ஆனந்த்

இஸ்ரேலுடனான உறவை கனடா மதிப்பீடு செய்வதாக கனடிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

கத்தாரில் ஹமாஸ் மூத்த தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை புதன்கிழமை (09) நடத்தியது.

இந்த நிலையில் கத்தார் தாக்குதலுக்குப் பின்னர்   இஸ்ரேலுடனான உறவை கனடா மதிப்பீடு செய்து வருகிறது என கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.

ஆனால் அந்த மதிப்பீடு குறித்து மேலதிக விபரங்களை அவர் வெளியிடவில்லை.

கத்தார் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என தெரிவித்த அனிதா ஆனந்த், இது ஒரு அத்துமீறல் ஆகும் என கூறினார்.

மத்திய கிழக்கில் அமைதிக்காக பாடுபட வேண்டும் என்பதும், காசாவில் உள்ள மனிதாபிமான நிலைமையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதும் கனடாவின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதில் கனடா கவனம் செலுத்துவதாக அனிதா ஆனந்த் கூறினார்.

Related posts

அமெரிக்க தேர்தல் தொடர்பாக கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை

Lankathas Pathmanathan

கனடா இந்த வாரம் 6 இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை பெறும்

Lankathas Pathmanathan

வரவு செலவுத் திட்டத்தில் கனேடியர்களுக்கு நேரடியாக உதவும் திட்டங்கள் அடங்கும்

Lankathas Pathmanathan

Leave a Comment