கனடாவில் வீட்டு வாடகை தொடர்ந்து குறைந்து வருகின்றது.
நாடளாவிய நீதியில் தொடர்ந்து 11-ஆவது மாதமாக வாடகை சரிவு August மாதத்தில் பதிவாகியுள்ளது.
Rentals.ca திங்கட்கிழமை (08) வெளியிட்ட புதிய அறிக்கையில் இந்தத் தகவல் வெளியானது.
கடந்த ஆண்டு August மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு August மாதம் கனடாவில் சராசரி வாடகை 2.3 சதவீதம் குறைந்து மாதத்திற்கு $2,137 ஆக இருந்தது.
வருடாந்த வாடகை சரிவில் Alberta மாகாணம் முன்னிலை வகிக்கின்றது.
