தேசியம்
செய்திகள்

இருவர் காயமடைந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான சந்தேக நபராக தேடப்படும் தமிழர்!

இரண்டு பேர் காயமடைந்த Pickering நகர துப்பாக்கிச் சூடு தொடர்பான சந்தேக நபர் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டார்.

இதில் தேடப்படும் சந்தேக நபர் Bradford நகரை சேர்ந்த 33 வயதான மகிபன் பேரின்பநாதன் என Durham காவல்துறை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் Pickering நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக இவர் தேடப்படும் ஒரு சந்தேக நபராக காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

August 16 ஆம் திகதி Liverpool and Kingston சந்திப்புக்கு அருகாமையில் அதிகாலை 1 மணியளவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான சந்தேக நபராக காவல்துறையினரால் இவர் அடையாளம் காணப்பட்டார்.

சம்பவ இடத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருவரை மீட்டனர்.

இவர்கள் இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தேடப்படும் மகிபன் பேரின்பநாதன் பல குற்றங்களுக்காக தேடப்படுகிறார் என Durham காவல்துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

ஆபத்தானவராகவும் கருதப்படும் இவரை எதிர்கொள்ளும் எவரும் 911 என்ற அவசர எண்ணை அழைக்குமாறு காவல்துறை அறிவுறுத்துகிறது.

இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளரின் நியமனம் கேள்விக்குள்ளானது

Lankathas Pathmanathan

ஏழு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்!

Lankathas Pathmanathan

கனடா ரஷ்யாவுடனான போரை தவிர்க்க வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment