தேசியம்
செய்திகள்

Alberta இடைத் தேர்தல் முன்கூட்டிய வாக்களிப்பில் 14 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களிப்பு!

Alberta மாகாண இடைத் தேர்தலின் முன்கூட்டிய வாக்களிப்பில் 14 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்தனர்.

Alberta மாகாணத்தின் Battle River-Crowfoot தொகுதிக்கான இடைத் தேர்தல் August 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை வெற்றி பெறும் நம்பிக்கையுடன் Pierre Poilievre போட்டியிடுவதனால் இந்த இடைத் தேர்தல் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் இங்கு கடந்த வெள்ளிக்கிழமை (08) ஆரம்பித்து  திங்கட்கிழமை (11) வரை தொடர்ந்த முன்கூட்டிய வாக்களிப்பில் 14,452 பேர் வாக்களித்ததாக கனடிய தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

கடந்த April பொதுத் தேர்தலின் போது முன்கூட்டிய வாக்களிப்பில்Battle River-Crowfoot தொகுதியில் 14,434 பேர் வாக்களித்ததாக தேர்தல் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தேர்தலில் Conservative தலைவர் Pierre Poilievre எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியில் Conservative வேட்பாளர் Damien Kurek 83 சதவீதமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

இந்த பொதுத் தேர்தலில் Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre தனது சொந்தத் தொகுதியில் தோல்வியடைந்த நிலையில் அவருக்கு நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் Damien Kurek தனது பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொகுதியில், பல தசாப்தங்களாக Conservative வேட்பாளர் 70 அல்லது 80 சதவீத வாக்குகளைப் பெற்று வருகிறார்.

இந்த இடைத்தேர்தலில் 214 வேட்பாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இது கனடிய வரலாற்றில் ஒரு பொதுத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்களைக் கொண்ட தேர்தலாக அமைந்துள்ளது.

இந்தத் தொகுதியில் Pierre Poilievre தவிர Liberal வேட்பாளர் Darcy Spady, NDP வேட்பாளர் Katherine Swampy, People’s Party வேட்பாளர் Jonathan Bridges, பசுமை கட்சி வேட்பாளர் Ashley MacDonald ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

Related posts

பிரதமர் Trudeau – மன்னர் Charles சந்திப்பு?

Lankathas Pathmanathan

வெடிகுண்டு எச்சரிக்கை ; மூடப்பட்ட கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் பாலம்

Gaya Raja

COVID தொற்று காலத்தில் overdose, அதிகளவிலான மதுபான பாவனை தொடர்பான இறப்புகள் அதிகரிப்பு!!

Gaya Raja

Leave a Comment