September 15, 2026
தேசியம்
செய்திகள்

இடைத் தேர்தலில் Pierre Poilievre எளிதாக வெற்றி பெறுவார்?

Alberta இடைத் தேர்தலில் Conservative தலைவர் Pierre Poilievre எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Alberta மாகாணத்தின் Battle River-Crowfoot தொகுதிக்கான இடைத் தேர்தல் August 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை வெற்றி பெறும் நம்பிக்கையுடன் இந்த இடைத் தேர்தலில் Pierre Poilievre போட்டியிடுகின்றார்.
இந்த நிலையில் குறிப்பிட்ட இடைத் தேர்தலில் Pierre Poilievre எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு வெள்ளிக்கிழமை (08) ஆரம்பித்த முன்கூட்டிய வாக்களிப்பு, திங்கட்கிழமை (11) வரை தொடரவுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியில் Conservative வேட்பாளர் Damien Kurek 83 சதவீதமான வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.
இந்த பொதுத் தேர்தலில் Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre தனது சொந்தத் தொகுதியில் தோல்வியடைந்த நிலையில் அவருக்கு நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் Damien Kurek தனது பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொகுதியில், பல தசாப்தங்களாக Conservative  வேட்பாளர் 70 அல்லது 80 சதவீத வாக்குகளைப் பெற்று வருகிறார்.
இந்த இடைத்தேர்தலில் 214 வேட்பாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இது கனடிய வரலாற்றில் ஒரு பொதுத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்களைக் கொண்ட தேர்தலாக அமைந்துல்லது.
இந்தத் தொகுதியில் Pierre Poilievre தவிர Liberal வேட்பாளர் Darcy Spady, NDP வேட்பாளர் Katherine Swampy, People’s Party வேட்பாளர் Jonathan Bridges, பசுமை கட்சி வேட்பாளர் Ashley MacDonald ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

Related posts

ஐரோப்பாவில் உள்ள நட்பு நாடுகளுக்கு Trudeau பயணம்

Lankathas Pathmanathan

அதிகமாகம் விரக்தியடைந்த Conservative நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் உள்ளனர்: Steven MacKinnon

Lankathas Pathmanathan

கனேடிய நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி!

Gaya Raja

Leave a Comment