தேசியம்
செய்திகள்

G7 மாநாட்டில் கலந்து கொள்ள உலக நாடுகளின் தலைவர்களை Alberta முதல்வர் வரவேற்கத் தயார்!

G7 மாநாட்டில் கலந்து கொள்ள Alberta மாகாணத்திற்கு செல்லும் உலக நாடுகளின் தலைவர்களை மாகாண முதல்வர் Danielle Smith வரவேற்க உள்ளார்.

Calgary நகரின் தென்மேற்கில் நடைபெறும் மூன்று நாள் G7 நிகழ்விற்காக தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை (15) Alberta-வில் தரையிறங்க ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களை மாகாண முதல்வர் Danielle Smith வரவேற்க தயாராக உள்ளார்.

உறுப்பினர் அல்லாத நாடுகளின் பிரதிநிதிகளை திங்கட்கிழமை (16) மாலை Calgary-யில் நடைபெறும் வரவேற்பு நிகழ்வொன்றில் Danielle Smith நடத்த உள்ளார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

உச்சி மாநாடு நடைபெறும் நாட்கள் முழுவதும், பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தவுள்ளார்.

Related posts

தொற்றின் அண்மைய அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டது: தலைமை பொது சுகாதார அதிகாரி

Montreal நகரின் பனிப்புயல் முன்னறிவிப்பை தவறாக கணித்த சுற்றுச்சூழல் திணைக்களம்?

Lankathas Pathmanathan

பெரும் எண்ணிக்கையில் சட்டவிரோத போதைப் பொருள் பறிமுதல்!

Lankathas Pathmanathan

Leave a Comment