September 16, 2026
தேசியம்
செய்திகள்

North York துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – 5 பேர் காயம்!

North York நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார் – 5 பேர் காயமடைந்தனர்.

இதில் 40 வயது ஆம் ஒருவர் பலியானதாகவும், நான்கு ஆண்கள், ஒரு பெண் உட்பட ஐந்து பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் Toronto காவல்துறை அதிகாரி பகீர் சர்வானந்தன் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (03) இரவு நிகழ்ந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பல சந்தேக நபர்கள் காவல்துறையினரால் தேடப்படுகின்றனர்.

ஆனாலும் தேடப்படும் சந்தேக நபர்கள் குறித்த மேலதிக விபரங்கள் எதையும் காவல்துறையினர் வெளியிடவில்லை.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது, Allen வீதிக்கும் தொடர்மாடி அடுக்ககங்களுக்கும் இடையிலான ஒரு சந்துப் பாதையில் பலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

இது ஒரு தற்செயலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமா அல்லது குறிவைத்து நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு காவல்துறையினர் பதிலளிக்கவில்லை.

ஆனாலும் இந்த சம்பவத்தினால் “பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை” என பகீர் சர்வானந்தன் மேலும் கூறினார்.

துப்பாக்கிச் சூடு நடந்த சிறிது நேரத்தில் மேலும் சில காயமடைந்தவர்கள் வேறு ஒரு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இதுவரை விசாரணையில் காவல்துறையினர் எந்த துப்பாக்கிகளையும் மீட்கவில்லை தெரிவிக்கப்படுகிறது.

Related posts

போலந்து பிரதமர் – கனடிய பிரதமர் சந்திப்பு!

Lankathas Pathmanathan

Ontarioவில் 11 ஆயிரம் பேர் தொடர்ந்தும் மின்சாரம் இல்லாத நிலையில்

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு உதவ 500க்கும் மேற்பட்ட கனேடிய துருப்புக்கள் தயார் நிலையில்

Lankathas Pathmanathan

Leave a Comment