September 13, 2026
தேசியம்
செய்திகள்

ஆறு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கும் நாடாளுமன்ற அமர்வுகள்!

கனடிய நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு இந்த வாரம் ஆரம்பிக்கிறது.

6 மாதங்களுக்குப் பின்னர் நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கின்றன.

January மாதம் குளிர்கால விடுமுறையில் இருந்தபோது நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அமர்வுகள் ஆரம்பிக்க இருந்த தினத்திற்கு முன்னர் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

April 28 நடைபெற்ற தேர்தலில் Mark Carney தலைமையிலான Liberal மீண்டும் சிறுபான்மை ஆட்சியமைத்தது.

இந்த நிலையில் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்க நாடாளுமன்றம் திங்கட்கிழமை (26) கூடுகிறது.

தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (27) மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆற்றும் அரியணை உரை நடைபெறும்.

இந்த உரையில் அரசாங்கத்தின் இந்த அமர்வுக்கான முன்னுரிமைகள் கோடிட்டு காட்டப்படும்.

கனடாவின் இறையாண்மைக்கு அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில் மன்னரின் வருகை அமைகிறது.

திங்களன்று கனடா வந்தடையும் மன்னரும் அவரது துணைவி ராணி Camilla-வும் கனடாவில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஏற்பாடாகியுள்ளது.

Related posts

கனடாவில் அதிகரிக்கும் COVID தொற்றின் புதிய திரிபு!

Gaya Raja

இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கனடா வருகை

Lankathas Pathmanathan

வடக்கு Vancouver தீவில் இராணுவ உலங்கு வானூர்தி மூலம் எட்டு பேர் மீட்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment