தேசியம்
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி கனடா வருகை?

G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி கனடா வருகை தர உள்ளார்.

Donald Trump அடுத்த மாதம் G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடா வருகை தர உள்ளார் என வெள்ளை மாளிகை  வியாழக்கிழமை (22) உறுதிப்படுத்தியுள்ளது.

June 15 முதல் 17 வரை Donald Trump கனடாவில் தங்கி இருப்பார் என வெள்ளை மாளிகையின் பத்திரிகை தொடர்பாளர்  Karoline Leavitt உறுதிப்படுத்தினார்.

அமெரிக்க ஜனாதிபதியின் வருகை குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கடந்த 6 ஆம் திகதி, வெள்ளை மாளிகையில் கனடிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, இரு தலைவர்களும், அடுத்த மாதம் G7 உச்சி மாநாட்டில் சந்திப்பதை எதிர்பார்ப்பதாக பிரதமர் Mark Carney குறிப்பிட்டிருந்தார்.

51-வது G7 உச்சி மாநாடு June 15 முதல் 17 வரை Alberta மாகாணத்தின் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

Related posts

உக்ரைன் மீதான  ரஷ்யாவின் தாக்குதலுக்கு கனடிய பிரதமர், வெளியுறவு அமைச்சர் கண்டனம்

Lankathas Pathmanathan

FIFA: Round of 32 சுற்றில் கனடா தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும்!

Lankathas Pathmanathan

மெக்சிகோ சென்றடைந்தார் பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment