September 6, 2026
தேசியம்
செய்திகள்

Scarborough-Rouge Park தொகுதியில் இடைத் தேர்தல்!

Toronto நகர சபைக்கான இடைத்தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்தத் தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத் தேர்தலை நடத்த Toronto நகர சபை முடிவு செய்துள்ளது.

வியாழக்கிழமை (22) Toronto நகர சபை இந்த இடைத்தேர்தலை நடத்த 19-க்கு 1 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வாக்களித்தது.

இந்த வாக்களிப்பில் ஐந்து நகரசபை உறுப்பினர்கள்  கலந்து கொள்ளவில்லை.

தமிழரான Scarborough தென்மேற்கு தொகுதி நகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் இந்த வாக்களிப்பில் பங்கேற்பதை தவிர்த்தார்.

அவரது துணைவியான அனு ஸ்ரீஸ்கந்தராஜா இந்த பதவிக்கு போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வரும் நிலையில் குறிப்பிட்ட வாக்களிப்பில் கலந்து கொள்வதை பார்த்தி கந்தவேள் தவிர்த்துள்ளார்.

அனு ஸ்ரீஸ்கந்தராஜா தற்போது Scarborough-Rouge Park  தொகுதிக்கான Toronto நகர பாடசாலை வாரிய அறங்காவலராக பணியாற்றுகின்றார்.

தவிரவும் மற்றொரு தமிழரான நீதான் சான் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் ஆர்வத்தை ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.

இந்தத் தொகுதிக்கான வேட்புமனுக்கள் June 23 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரியவருகிறது

September அல்லது October ஆரம்பத்தில் வாக்களிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடைத்தேர்தல் $550,000 செலவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontario பாடசாலை கல்வியாண்டின் ஆரம்பம் தாமதம்?

Lankathas Pathmanathan

Brian Mulroneyயின் இறுதிச் சடங்கு விவரங்கள் வெளியாகின

Lankathas Pathmanathan

Toronto கல்விச் சபை பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன!

Gaya Raja

Leave a Comment