September 23, 2026
தேசியம்
செய்திகள்

Ontario-வின் பற்றாக்குறை அதிகரிக்கிறது

Ontario மாகாணத்தின் பற்றாக்குறை $10 பில்லியனாக அதிகரிக்கிறது.

Ontario மாகாண வரவு செலவுத் திட்டம் வியாழக்கிழமை (15 ) சமர்பிக்கப்பட்டது.

$232.5 பில்லியன் வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் Peter Bethlenfalvy தாக்கல் செய்தார்.

அமெரிக்காவின் வரிகளிலிருந்து பொருளாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் மூலம் மாகாணத்தின் பற்றாக்குறை $10 பில்லியனாக அதிகரிக்கிறது.

March மாதம் நடைபெற்ற தேர்தலில் Doug Ford அரசாங்கம் மீண்டும் வெற்றி பெற்ற பின்னர் முதல் முறையாகும் இந்த வரவு செலவுத் திட்டம் வியாழன்று சமர்பிக்கப்பட்டது.

புதிய செலவினம் 2025-26 ஆம் ஆண்டில் அரசாங்கம் $14.6 பில்லியன் பற்றாக்குறையை கணித்துள்ளது என்பதை குறிக்கிறது.

இது கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கணிக்கப்பட்டதை விட $10 பில்லியன் அதிகமாகும்.

அதேவேளை சில மாதங்களுக்கு முன்னர் கணிக்கப்பட்ட பொருளாதார அறிக்கையை விட $13 பில்லியன் அதிகமாகும்.

இந்த வரவு செலவுத் திட்டம் மூலம் 2026-27 ஆம் ஆண்டில் $7.8 பில்லியன் பற்றாக்குறை எதிர்பார்க்கப்படுகிறது.

இது முன்னர் கணிக்கப்பட்ட $500 மில்லியன் உபரியில் இருந்து பெரும் மாற்றமாகும்.

2027-28 ஆம் ஆண்டுக்குள் வரவு செலவுத் திட்டத்தை சமப்படுத்த முடியும் என மாகாண அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்தது.

அந்த நிதியாண்டில் $200 மில்லியன் உபரி கணிக்கப்படுகிறது.

அடுத்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்புக்காக சுமார் $200 பில்லியனை செலவிட திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

இதில் 2025-26 ஆம் ஆண்டில் $33 பில்லியன் அடங்குகிறது.

அடுத்த பத்தாண்டுகளில், இந்தத் திட்டத்தில் நெடுஞ்சாலை கட்டுமானம், மறுவாழ்வுக்காக $30 பில்லியன்; பொதுப் போக்குவரத்துக்கு $61 பில்லியன்; சுகாதாரப் பராமரிப்பு உள்கட்டமைப்பிற்கு $56 பில்லியன்; பாடசாலைகள் குழந்தை பராமரிப்பு இடங்களை அமைக்க $30 பில்லியன் அறிவிக்கப்படுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பல நடவடிக்கைகள் முன்னரே அறிவித்தலாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

FIFA: உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது கனடா

Lankathas Pathmanathan

அமெரிக்கத் துணைத் தூதரக துப்பாக்கிச் சூடு சந்தேக நபர்கள் பணத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்தும் குழுவைச் சேர்ந்தவர்கள்?

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 25ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment