தேசியம்
செய்திகள்

Brampton தமிழின அழிப்பு நினைவகம் குறித்த விபரங்களை கோரும் ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சு?

தமிழின அழிப்பு நினைவகம் கனடாவில் திறந்து வைக்கப்பட்டது குறித்த விபரங்களை தனது Ottawa உயர்ஸ்தானிகர் மூலம் பெற ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Ontario மாகாணத்தின் Brampton நகரில் உள்ள Chinguacousy பூங்காவில் தமிழின அழிப்பு நினைவகம் சனிக்கிழமை (10) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழின அழிப்பில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் நினைவாக இந்த நினைவகம் திறக்கப்பட்டது.

இந்த நிகழ்வு குறித்த விபரங்களை ஸ்ரீலங்காவுக்கான Ottawa உயர்ஸ்தானிகர் மூலம் அவசரமாக பெற ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

August 2024-இல் நடைபெற்ற இந்த நினைவகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவின் பின்னர், இலங்கைக்கான கனடியத் தூதர் அழைக்கப்பட்டு ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினால் விளக்கம் கோரப்பட்டது.

இந்த நினைவகம் அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு Brampton நகர முதல்வர் Patrick Brown-க்கு எழுதியுள்ள கடிதத்தில் கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் Thushara Rodrigo வலியுறுத்தி இருந்தது கடந்த ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

B.C. வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயம்!

Lankathas Pathmanathan

அமெரிக்க Open இறுதி சுற்றில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தை கனேடிய ஆண் வீரர் இழந்துள்ளார்

Gaya Raja

சுரேன் கார்த்திகேசுவின் “போரின் சாட்சியம்” நூல் Toronto அறிமுகம்! 

Lankathas Pathmanathan

Leave a Comment