September 11, 2024
தேசியம்
செய்திகள்

கடந்த மாதம் தொற்றாளர்களுடன் 400க்கு அதிகமான விமானங்கள் கனடாவை வந்தடைந்தன!

July மாதத்தில் கனடாவை வந்தடைந்த 400க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களில் COVID தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர்.

கனடாவை நோக்கிய விமானப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், தொற்றுக்கு எதிரான சோதனைகளுக்கு கட்டாயத் தேவை உள்ளபோதிலும்  435 சர்வதேச விமானங்கள் தொற்றாளர்களுடன் கனடாவை வந்தடைந்துள்ளது.

இந்த விமானங்களில் 133 அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு வந்தவையாகும்.
தவிரவும் வெளிநாடுகளில் இருந்து வந்த விமானங்களில் Amsterdamமில் இருந்து அதிக எண்ணிக்கையில் தொற்றாளர்கள் பயணித்து கனடாவை வந்தடைந்தனர்.
இவற்றில் அநேக விமானங்கள் Toronto, Montreal ஆகிய நகரங்களை வந்தடைந்தன.

Related posts

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு கனடிய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan

ஈரான் போராட்டங்களுக்கு ஆதரவாக கனடாவில் பேரணிகள்

Lankathas Pathmanathan

Ontario NDPயின் இடைக்காலத் தலைவரானார் Peter Tabuns

Leave a Comment