தேசியம்
செய்திகள்

சுகாதார ஊழியர்களுக்கு Quebec தடுப்பூசிகளை கட்டாயமாக்கலாம்!

சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசிகளை கட்டாயமாக்குவது குறித்து Quebec மாகாணம் பரிசீலிக்கிறது.

COVID தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி கட்டளையை விதிக்க Quebec பரிசீலித்து வருகிறது.

சுகாதார ஊழியர்களுக்கு  தடுப்பூசியை கட்டாயமாக்க அரசாங்கம்  பரிசீலிப்பதாக மாகாண முதல்வர் அலுவலக பேச்சாளர் கூறினார்.

Quebec மாகாணம் தடுப்பூசி கடவுச்சீட்டை நடைமுறைபடுத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் François Legault அறிவித்த மறுநாள் இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரச ஊழியர்களுக்கு தடுப்பூசிகளை கட்டாயமாக்குவது குறித்து பரிசீலிப்பதாக வியாழக்கிழமை பிரதமர் Justin Trudeau அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கறுப்பின கனேடியப் பிரிவுகள் எதிர்கொண்ட இனவெறிக்கு பிரதமர் மன்னிப்பு

Lankathas Pathmanathan

Londonனில் வெறுப்புணர்வை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வமத நடை பவனி

Gaya Raja

அமெரிக்க எல்லையில் ஆட்கள் கடத்தப்படுவதை தடுக்க கனடா அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்: பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!