September 10, 2026
தேசியம்
செய்திகள்

திருத்தந்தையின் இறுதிச் சடங்கில் கனடாவின் ஆளுநர் நாயகம் பங்கேற்பு!

உலகக் கத்தோலிக்க திரு அவையின் திருத்தந்தையின் இறுதிச் சடங்கில் கனடாவின் ஆளுநர் நாயகம் கலந்து கொள்கிறார்.

உலகக் கத்தோலிக்க திரு அவையின் திருத்தந்தை Francis திங்கட்கிழமை (21)தனது 88-ஆவது வயதில் காலமானார்.

அவரது இறுதிச் சடங்கு சனிக்கிழமை (26)நடைபெறுகிறது.

இந்த இறுதிச் சடங்கில் கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆளுநர் நாயகம் Mary Simon கலந்து கொள்வார் என கனடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முக்கியமான தேர்தல் காலத்தில் இறுதிச் சடங்கில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என புதன்கிழமை (23)நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வில் Mark Carney கூறினார்.

தேர்தல் பிரச்சார காலத்தில் இறுதிச் சடங்கில் தான் கலந்து கொள்வது தவறான முன்மாதிரியாக அமையும் என அவர் கூறினார்.

இறுதி நிகழ்வில் ஆளுநர் நாயகம் Mary Simon-உடன் கனடாவின் மூத்த தூதுக்குழுவும் இணைந்திருக்கும் எனவும்  Mark Carney கூறினார்.

ஆனாலும் மீதமுள்ள கனடிய தூதுக்குழு உறுப்பினர்கள் விபரங்கள் இறுதி செய்யப்படவில்லை என பிரதமர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இறுதி நிகழ்வில் கனடாவின் ஐந்து கர்தினால்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

அவசரகாலச் சட்ட விசாரணையில் பிரதமர் அடுத்த வாரம் சாட்சியமளிக்கிறார்

Lankathas Pathmanathan

இலங்கையில் தொடரும் அரசியல் தலைமையற்ற நிலை: கரி ஆனந்தசங்கரி விமர்சனம்

Lankathas Pathmanathan

கனடியர்களுக்கு விரைவில் பயணக் கட்டுப்பாடு: பிரதமர் Trudeau எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment