தேசியம்
செய்திகள்

இலங்கையில் தொடரும் அரசியல் தலைமையற்ற நிலை: கரி ஆனந்தசங்கரி விமர்சனம்

இலங்கையை ஒரு திவாலான, தோல்வியடைந்த நாடு என Scarborough Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி மீண்டும் வர்ணித்தார்.

இலங்கைக்கு நீடித்த நிதி வசதியின் கீழ் கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியது குறித்து கரி ஆனந்தசங்கரி செவ்வாய்கிழமை (21) கருத்து தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாயன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

 

இலங்கையில் தொடர்ந்தும் அரசியல், பொருளாதார தலைமையற்ற நிலை தொடரும் நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி ஒப்புதல் கிடைத்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

ஆனாலும் சர்வதேச நாணய நிதியம் வழங்கும் இந்த நிதி ஊடாக இலங்கை மீது சில அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியும் என கரி ஆனந்தசங்கரி நம்பிக்கை தெரிவித்தார்

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக நான்கு வருடங்களில் 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி கடன் திட்டத்தை வழங்குவதற்கு அதன் நிறைவேற்று சபை ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் திங்கட்கிழமை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்ட நடவடிக்கை முன்னெடுக்கும் Han Dong

Lankathas Pathmanathan

Saskatchewan மாகாணம் 2026-27ஆம் ஆண்டுக்குள் சமநிலைக்குத் திருப்பும்: நிதி அமைச்சர்

Lankathas Pathmanathan

Markham நகரில் விபத்துக்குள்ளான விமானம்!

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!