தேசியம்
செய்திகள்

திருடப்படும் நிரான் ஜெயநேசனின் தேர்தல் பிரச்சார பதாதைகள்?

மற்றொரு தமிழ் வேட்பாளரின் தேர்தல் பிரச்சார பதாதைகள் திருடப்படும் சம்பவம் குறித்து முறையிடப்படுகிறது.
Markham Stouffville தொகுதியின் Conservative கட்சி வேட்பாளர் நிரான் ஜெயநேசனின் தேர்தல் பிரச்சார பதாதைகள் திருடப்படுவதாக முறையிடப்படுகிறது.
நிரான் ஜெயநேசனின் தேர்தல் பிரச்சார பதாதைகளை  ஒருவர் நாடு இரவில் திருடிச் செல்லும் ஒளிப்பதிவு தேசியத்திற்கு கிடைத்துள்ளது.

இது போன்ற சம்பவங்களை அவதானித்தால் தமது பிரச்சார அலுவலகத்திக்கு தெரியப்படுத்துமாறு அல்லது காவல்துறையில் முறையிடுமாறு கோரப்படுகிறது.

ஏற்கனவே Markham-Thornhill தொகுதியின் Conservative கட்சி வேட்பாளர் லயனல் லோகநாதனின் தேர்தல் பிரச்சார பதாதைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைதான சந்தேக நபரை  Alex Curley என லயனல் லோகநாதன் அடையாள படுத்தியுள்ளார்.
இவருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
இது போன்ற சம்பவங்களை அவதானித்தால் தமது பிரச்சார அலுவலகத்திக்கு தெரியப்படுத்துமாறு அல்லது காவல்துறையில் முறையிடுமாறு இரு வேட்பாளர்களும் கோரியுள்ளனர்
தேர்தல் பிரச்சார பதாதைகளை சேதப்படுத்துவது அல்லது திருடுவது தேர்தல் சட்டத்தின் ஒரு குற்றமாகும்.

Related posts

சைபர் தாக்குதலுக்கான எச்சரிக்கை நிலையில் கனடா

Lankathas Pathmanathan

புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் வருகையை குறைக்கும் கனடா

Lankathas Pathmanathan

ஹெய்ட்டி நெருக்கடி குறித்த அவசர கூட்டத்தில் Bob Rae பங்கேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment