தேசியம்
செய்திகள்

சேதப்படுத்தபடும் தமிழ் வேட்பாளரின் பிரச்சார பதாதைகள்?

Markham-Thornhill தொகுதியின் Conservative கட்சி வேட்பாளர் லயனல் லோகநாதனின் தேர்தல் பிரச்சார பதாதைகள் சேதப்படுத்த படுவதாக காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது.

சேதப்படுத்தப்படும் தேர்தல் பிரச்சார பதாதைகள்

நடைபெறவுள்ள தேர்தலில் Markham- Thornhill தொகுதியில் Conservative கட்சியின் வேட்பாளராக தமிழரான லயனல் லோகநாதன் போட்டியிடுகின்றார்.

தேர்தல் வாக்களிப்புக்கு இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் லயனல் லோகநாதனின் பிரச்சார பதாதைகள் சேதப்படுத்த படுவதாக York பிராந்திய காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது.

சேதப்படுத்தப்படும் தேர்தல் பிரச்சார பதாதைகள்

Markham- Thornhill தொகுதி முழுவதும் தனது பிரச்சார பதாதைகள் Liberal, NDP கட்சி  ஆதரவாளர்களால் சேதப்படுத்த படுவதாக லயனல் லோகநாதன் காவல்துரையில் முறையிட்டுள்ளார்.

இது போன்ற சம்பவங்களை அவதானித்தால் தமது பிரச்சார அலுவலகத்திக்கு தெரியப்படுத்துமாறு அல்லது காவல்துறையில் முறையிடுமாறு லயனல் லோகநாதன் கோரியுள்ளார்.

Related posts

காட்டுத்தீ நிலைமை தீவிரமானது: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan

கனடிய அரசாங்கத்தின் புதிய துப்பாக்கிச் சட்டம் திங்கட்கிழமை அறிமுகமாகிறது

Lankathas Pathmanathan

கடும் குளிர் காரணமாக விமான சேவைகளில் சவால்?

Lankathas Pathmanathan

Leave a Comment