தேசியம்
செய்திகள்

பிரதமர் பதவியில் இருந்து உத்தியோக பூர்வமாக விலகினார் Justin Trudeau

கனடாவின் 23-வது பிரதமர் பதவியில் இருந்து Justin Trudeau உத்தியோக பூர்வமாக விலகினார்.

24-ஆவது பிரதமராக Mark Carney பதவி ஏற்பதற்கு முன்னதாக Justin Trudeau தனது பதவியில் இருந்து வெள்ளிக்கிழமை (14) விலகினார்.

ஏறக்குறைய ஒரு தசாப்த காலம் Justin Trudeau ஆட்சியில் இருந்தார்.

Liberal கட்சியின் தலைமையில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau கடந்த January மாதம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஆளுநர் நாயகம் Mary Simon முன்னிலையில் தனது பதவியில் இருந்து விலகினார்.

December 25, 1971 பிறந்த அவர் Liberal கட்சியின் தலைவராக 2013 முதல் 2025 வரை பதவி வகித்தவர்.

Justin Trudeau, கனடிய பிரதமராக 2015 முதல் 2025 வரை பதவி வகித்தவர்.

இவர் 2008 முதல் Québec மாகாணத்தின் Papineau தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

Related posts

தமிழர் தெருவிழாவில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவு: தெருவிழா மேலாளர் கருத்து

Lankathas Pathmanathan

மேற்கு கனடாவில் Delta மாறுபாட்டின் வழித்தோன்றல்களை கண்காணிக்கும் சுகாதார அதிகாரிகள்!

Gaya Raja

ஆயிரக் கணக்கணக்காவர்களுக்கு மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது!

Lankathas Pathmanathan

Leave a Comment