September 7, 2026
தேசியம்
செய்திகள்

பிரதமர் அலுவலக ஊழியர்கள் அவசர சந்திப்பு!

பிரதமர் அலுவலக ஊழியர்கள் திங்கட்கிழமை  (06) சந்திக்க உள்ளனர்.

பிரதமர் Justin Trudeau புதன்கிழமைக்கு (08)  முன்னதாக பதவி விலகுவதாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் அலுவலக ஊழியர்கள் திங்கட்கிழமை சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.

Liberal நாடாளுமன்ற குழுவின் ஆதரவு இல்லாத நிலையில், தொடர்ச்சியான தலைமை பதவியில் இருக்க முடியாது என்பதை Justin Trudeau தனது அலுவலக ஊழியர்களுக்கு இந்த சந்திப்பில் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Justin Trudeau தனது பதவி விலகலை அறிவித்தால், அது Liberal கட்சியின் தலைமையில் இருந்து இருக்கும் எனவும், ஒரு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பிரதமராக நீடிப்பதே நோக்கமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Chrystia Freeland அமைச்சரவையில் இருந்து விலகியதைத் தொடர்ந்து பிரதமர் Justin Trudeau பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெறுகின்றன.

Justin Trudeau பதவி விலக வேண்டும் என Quebec, Atlantic, Ontario, British Columbia மாகாணங்களின் Liberal கட்சி நாடாளுமன்ற குழுக்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளன.

இந்த விடயம் குறித்து விவாதிக்க ஒரு தேசிய நாடாளுமன்ற குழு கூட்டம்   புதன்கிழமை நடைபெறவுள்ளது.

Justin Trudeau 2013 முதல் கனடாவின் Liberal கட்சியின் தலைவராகவும், 2015 முதல் பிரதமராகவும் இருந்து வருகிறார்.

Related posts

Toronto நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தலில் ஐந்தாவது தமிழர்!

Lankathas Pathmanathan

Scarborough வீதி விபத்தில் ஒருவர் பலியானார் – ஒருவர் படுகாயம்!

Lankathas Pathmanathan

Ontarioவில் 3 நாட்களில் 58 புதிய monkeypox தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment