Winnipeg நகர Health Sciences Centre வைத்தியசாலையில் சிகிச்சைக்கு காத்திருந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த சம்பவம் நிகழ்ந்தது.
செவ்வாய்க்கிழமை (07) காலை சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி மரணமடைந்ததை தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.
அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக எட்டு மணி நேரம் காத்திருந்த இந்த நோயாளி மரணமடைந்தார்.
செவ்வாய் நள்ளிரவுக்குப் பின் இந்த நோயாளி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சென்றார் என தெரியவருகிறது .
அவர் மதிப்பீடு செய்யப்பட்டு, சோதனை செய்யப்பட்டு, காத்திருக்கும் அறையில் காத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டார் .
காத்திருப்பு அறையில் மறுமதிப்பீட்டுக்கு நோயாளி காத்திருந்தபோது காலை 8 மணியளவில் அவரது நிலை மோசமடைந்து என கூறப்படுகிறது.
அவருக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் அது பலனின்றி அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த மரணம் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக மருத்துவமனை அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை நெறிமுறைகளை மதிப்பாய்வு செய்ய உறுதியளித்துள்ளது.