British Columbia மாகாணத்தில் மத்திய இடைத்தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது.
Cloverdale-Langley City தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த December) மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பிரதமர் அலுவலகம் இந்த அறிவித்தலை வெளியிட்டது.
முன்னாள் Liberal நாடாளுமன்ற உறுப்பினர் John Aldag கடந்த May மாதம் Cloverdale-Langley City தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.
மாகாண தேர்தல் புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போய்டயிடுவதைக்காக அவர் இந்த முடிவை எடுத்தார்.
அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கடந்த மாதங்களில் இரண்டு இடைத்தேர்தல்களில் நீண்டகாலமாக தம்வசம் வைத்திருந்த தொகுதிகளை இழந்த Liberal கட்சிக்கு இந்த இடைத்தேர்தல் மற்றொரு சோதனையாக அமைகிறது.
இம்முறை இந்தத் தொகுதியில் முன்னாள் Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Tamara Jansen வேட்பாளராகிறார்.
இவர் இந்தத் தொகுதியை 2019 முதல் 2021 வரை பிரதிநிதித்துவப்படுத்தியவர்.