தமிழர் ஒருவர் உட்பட 14 வேட்பாளர்கள் போட்டியிடும் Toronto நகர சபையின் இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (04) நடைபெறுகிறது.
வெற்றிடமாக உள்ள Don Valley மேற்கு தொகுதி நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழர் ஒருவரும் போட்டியிடுகிறார்.
இதில் கடுமையான போட்டி முன்னாள் Toronto கல்வி சபை உறுப்பினர் Rachel Chernos Lin, ஊடகவியலாளர் Anthony Furey ஆகியோருக்கு இடையில் இருக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.
இதில் போட்டியிடும் தமிழர் Evan சாம்பசிவம் முன்னரும் நகரசபை வேட்பாளராக போட்டியிட்டவராவார்.
நீண்ட கால நகர சபை உறுப்பினர் Jaye Robinson புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்ததை அடுத்து அவரது பதவி வெற்றிடமானது.
இந்த தொகுதியில் 16 வேட்பாளர்கள் பெயர்கள் வாக்குசீட்டில் உள்ள போதிலும் இருவர் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.
இந்த தொகுதிக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு October 26, 27ஆம் திகதிகளில் நடைபெற்றுள்ளது