September 19, 2026
தேசியம்
செய்திகள்

கடத்தப்பட்ட Ontario பெண் குறித்த தகவல் வழங்குபவர்களுக்கு $100,000 வெகுமதி

கடத்தப்பட்டதாக கூறப்படும் Ontario பெண் குறித்த தகவல் வழங்குபவர்களுக்கு 100,000 டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் Elnaz Hajtamiri என்ற பெண் Wasaga Beach இல்லத்தில் இருந்து கடத்தப்பட்டதாக Ontario மாகாண காவல்துறை தெரிவிக்கிறது.

இவரது இருப்பிடம் குறித்த தகவல் வழங்குபவர்களுக்கு 100,000 டொலர் பரிசு வழங்குவதாக வியாழக்கிழமை (12) OPP அறிவித்தது.

காவல்துறையினரின் உடை அணிந்த மூன்று நபர்களினால் அவர்வெள்ளை நிற Lexus SUV வாகனத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சந்தேக நபர்களில் இருவரின் ஓவியங்களை முதன்முறையாக காவல்துறையினர் வெளியிட்டனர்.

இந்த வெகுமதி OPP, York பிராந்திய காவல்துறையால் வழங்கப்படுகிறது.

Related posts

தடுப்பூசிகளின் கட்டுப்பாடுகள் குறித்து கனடிய பிரதமர் கவலை

Gaya Raja

Ontario வனவிலங்குகளில் COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

இலையுதிர்கால வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும்?

Lankathas Pathmanathan

Leave a Comment