தேசியம்
செய்திகள்

Toronto காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கி சூடு – சந்தேக நபரை தேடும் காவல்துறையினர்!

Toronto காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
புதன்கிழமை (02) பிற்பகல் காவல்துறை அதிகாரி ஒருவரை சுட்டுக் காயப்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Yonge – Eglinton சந்திப்புக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காவல்துறையினர் கொள்ளை விசாரணை ஒன்றை முன்னெடுத்து வந்த நிலையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நிகழ்ந்தது.
காயமடைந்த காவல்துறை அதிகாரி Sunnybrook மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காயமடைந்த அதிகாரி  29 வயதுடையவர் எனவும், அவர் Toronto காவல்துறையில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருவதாக Toronto காவல்துறைத் தலைவர் Myron Demkiw கூறினார்.
குறிப்பிட்ட காவல்துறை அதிகாரி அடிவயிற்றுப் பகுதியில் சுடப்பட்டதாகவும், அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் சம்பவ இடத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இரண்டாவது சந்தேக நபரை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், அவர் குறித்த விபரங்கள் எதையும் அவர்கள் வெளியிடவில்லை.
“துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படும் இரண்டாவது சந்தேக நபரை தேடி வருகிறோம்” என  Myron Demkiw தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் போது ஒரு காவல்துறை அதிகாரி தனது துப்பாக்கியை உபயோகித்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு (SIU) விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இந்த ஆண்டு Toronto நகரில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்த 637 வது சம்பவம் இதுவாகும்.

Related posts

Markham இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை கைவிட்ட தமிழர்!

Lankathas Pathmanathan

200,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தேர்தல் திணைக்களத்தில் தற்காலிக பணி!

Lankathas Pathmanathan

தமிழரின் நாடு கடத்தலுக்கு இடைக்காலத் தடை விதித்த கனடிய நீதிமன்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment