September 4, 2026
தேசியம்
செய்திகள்

Justin Trudeau அரசாங்கம் வீழ்ச்சியடைய வேண்டும்: Quebec முதல்வர்

Justin Trudeau அரசாங்கம் வீழ்ச்சியடைய வேண்டும் என Quebec முதல்வர் விருப்பம் தெரிவித்தார்.

Quebec மாகாணத்தின் விருப்பத்தை பிரதமர் தொடர்ந்து அவமதித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் Liberal அரசாங்கத்தை பதவி விலத்தி, தேர்தலை நடத்த உதவுமாறு Quebec முதல்வர் Francois Legault வலியுறுத்தினார்.

Bloc Quebecois கட்சியிடம் வியாழக்கிழமை (19) இந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்தார்.

ஆனாலும் இந்தக் கோரிக்கையை Bloc Quebecois தலைவர் Yves-Francois Blanchet நிராகரித்தார்.

கடந்த பல மாதங்களாக Justin Trudeauவுக்கு எதிராக Francois Legault கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்.

மாகாண அதிகார வரம்பு விவகாரங்களில் பிரதமர் தலையிடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

சிறுபான்மை Liberal அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு கிடைக்கும் முதல் வாய்ப்பில் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்னெடுக்க Conservative தலைவர் Pierre Poilievre உறுதியளித்தார்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என் எதிர்க்கட்சிகளை Pierre Poilievre கோரினார்.

ஆனாலும் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை தெரிவித்து வாக்களிப்பார்கள் என Bloc Quebecois தலைவர் Yves-François Blanchet கூறினார்.

Related posts

AHS ஊழல் குற்றச்சாட்டு: துணை அமைச்சர்களை மாற்ற Alberta முதல்வர் முடிவு

Lankathas Pathmanathan

NATO உச்சி மாநாட்டில் வர்த்தகத்தில் கவனம் செலுத்த உள்ள பிரதமர்

Lankathas Pathmanathan

புதன்கிழமை கனடாவில்…..

thesiyam

Leave a Comment