தேசியம்
செய்திகள்

15 வயது சிறுவன் RCMP அதிகாரிகளால் சுட்டுக் கொலை

Edmonton நகருக்கு தெற்கே 15 வயது சிறுவன் RCMP அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வெள்ளிக்கிழமை (30) Wetaskiwin நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

பலியானவர் Samson Cree முதல் குடியை சேர்ந்த 15 வயது சிறுவன் என தெரியவருகிறது.

ஆயுதங்களுடன் அடையாளம் காணப்பட்ட இந்த சிறுவனிடம் இருந்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆனாலும் RCMP அதிகாரிகளுக்கும் குறிப்பிட்ட சிறுவனுக்கும் இடையில் நிகழ்ந்த ஒரு “மோதலில்” RCMP அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் நிலையை தோற்றுவித்தது.

இதில் காயமடைந்த சிறுவன், பின்னர் வைத்தியசாலையில் மரணமடைந்ததாக RCMP ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

இந்த சம்பவம் குறித்து Wetaskiwin முதல்வர் Tyler Gandam அதிர்ச்சி வெளியிட்டார்.

இந்த சம்பவம் குறித்து Alberta Serious Incident Response Team விசாரணைகளை முன்னெடுக்கிறது.

Related posts

Mississauga வாசிகளுக்கு துரோகம் இழைக்கும் Bonnie Crombie?

Lankathas Pathmanathan

Ontarioவில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்றுக்கள்!!

Gaya Raja

அதிக ஆபத்துள்ள கனடியர்கள் மருத்துவ முகமூடிகளை அணிய வேண்டும்

Lankathas Pathmanathan

Leave a Comment