தேசியம்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் கனடா தினக் கொண்டாட்டங்கள்

157 வது ஆண்டு கனடா தினத்தைக் குறிக்கும் கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைபெற்றன.

பிரதமர் Justin Trudeau கனடா தினம் குறித்து வெளியிட்ட வாழ்த்தில் கனடாவின் மதிப்புகளை போற்றினார்.

பன்மைத்துவம், உள்ளடக்கம், நியாயத்தன்மை ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்புக்காக தனது வருடாந்த கனடா தின உரையில் பிரதமர் பாராட்டினார்.

கனடா பல்வேறு கண்ணோட்டங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது என ஆளுநர் நாயகம் Mary Simon தனது கனடா தின வாழ்த்தில் குறிப்பிட்டார்.

பிரதான கனடா தின நிகழ்வு தலைநகர் Ottawaவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் துணை பிரதமர் Chrystia Freeland, பாரம்பரிய அமைச்சர் Pascale St-Onge உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.

பிரதமர் Justin Trudeau, ஆளுநர் நாயகம் Mary Simon ஆகியோர் Newfoundland and Labradorரில் நடைபெற்ற கனடா தின நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

அமெரிக்காவின் Washington நகரில் உள்ள கனடிய தூதரகத்திலும் கனடா தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

Related posts

கனடிய செய்திகள் – October மாதம் 13 ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan

Air Canada விடுமுறை நாடுகளுக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது !

Gaya Raja

PC கட்சி பல முக்கிய பிராந்தியங்களில் முன்னணியில் உள்ளது: புதிய கருத்துக் கணிப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment