September 30, 2026
தேசியம்
செய்திகள்

குழந்தைகள் பாலியல் விசாரணையில் 64 சந்தேக நபர்கள் கைது

குழந்தைகள் பாலியல் விசாரணையில் 64 சந்தேக நபர்களை Ontario மாகாண காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

64 சந்தேக நபர்கள் மாகாண ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பாக 348 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் 16 முதல் 67 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவருகிறது.

“Project Aquatic” என பெயரிடப்பட்ட இந்த விசாரணை குறித்த விபரங்களை புதன்கிழமை (08) காவல்துறையினர் அறிவித்தனர்.

February 2024 ஆரம்பிக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணை Ontario மாகாணம் முழுவதும் 129 தனித்தனி விசாரணைகளை உள்ளடக்கியது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்ட 34 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டனர்.

Related posts

AstraZeneca தடுப்பூசிகளை 65வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க கனடா முடிவு!

Gaya Raja

Ontario சட்டமன்றத்தில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை சட்ட மூலம்: இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு

Gaya Raja

உக்ரைன் தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வர சீனா ஆக்கபூர்வமான பங்கு வகிக்க வேண்டும்: கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment