September 8, 2026
தேசியம்
செய்திகள்

Dominic LeBlanc இந்த வாரம் அமெரிக்கா பயணம்?

கனடா-அமெரிக்கா இடையிலான பதற்றமான சூழலில் அமைச்சர் Dominic LeBlanc இந்த வாரம் அமெரிக்கா செல்கிறார்.

கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc சந்திப்புகளில் பங்கேற்பதற்காக இந்த வாரம் Washington பயணிக்க உள்ளதாக அவரது அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அமெரிக்காவுடனான கனடாவின் தலைமை வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர் Janice Charette இந்த பயணத்தில் இணைகிறார்.

அமைச்சரும் தலைமை பேச்சுவார்த்தையாளரும் எந்த நாட்களில் இந்தப் பயணத்தை முன்னெடுப்பார்கள் என்றோ, அவர்கள் யாரைச் சந்திப்பார்கள் என்றோ தகவல் வெளியிடப்படவில்லை.

18 மாத காலமாக கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போரில் புதிய பதற்றங்கள் நிலவி வரும் வேளையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

பல கனடியப் பொருட்கள் மீதான 50 சதவீத வரிகளை 30 நாட்களுக்குள் விதிக்க திட்டமிட்டுள்ளதாக Donald Trump கடந்த வாரம் அறிவித்துள்ள நிலையில், இந்த பயணம் குறித்து அறிவிக்கப்படுகிறது.

நவீனமயமாக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிய பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் Mark Carney பின்னர் தெரிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Toronto தலைமை மருத்துவர் விரைவில் பதவி விலகல்?

Lankathas Pathmanathan

இந்தியாவுக்கு கனடா 10 மில்லியன் டொலர் நிதியுதவி: பிரதமர்

Gaya Raja

தேர்தல் பிரச்சாரத்தில் Trudeau மீது சரளைக் கல் வீச்சு – காவல்துறை விசாரணை!

Gaya Raja

Leave a Comment