September 29, 2026
தேசியம்
செய்திகள்

McGill பல்கலைக்கழக முகாமை அகற்ற காவல்துறையிடம் முதல்வர் கோரிக்கை

McGill பல்கலைக்கழகத்தில் உள்ள முகாமை அகற்றுமாறு காவல்துறையினரை Quebec முதல்வர் கோரினார்.

பலஸ்தீன ஆதரவு முகாம்கள் அமெரிக்காவில் உள்ள பல பல்கலைகழகங்களிலும், கனடாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களிலும் உருவாகியுள்ளன.

இதில் Toronto பல்கலைக்கழகம், McGill, UBC ஆகிய கனடிய பல்கலைகழகங்களும் அடங்குகின்றன.

Montrealலில் உள்ள McGill பல்கலைக்கழக வளாகத்தின் கீழ் மைதானத்தில் உள்ள பாலஸ்தீனிய ஆதரவு போராட்ட முகாமை அகற்றுமாறு காவல்துறைக்கு Quebec முதல்வர்  Francois Legault அழைப்பு விடுத்துள்ளார்.

காசாவில் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை (27) முதல் McGill பல்கலைக்கழக வளாகத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை அகற்றுமாறு காவல்துறையினருக்கு இந்த வார ஆரம்பத்தில் McGill பல்கலைக்கழக நிர்வாகம் அழைப்பு விடுத்தது.

பல்கலைக்கழகத்தின் கோரிக்கைக்கு காவல்துறையினர் செவிசாய்த்து முகாமை அகற்றுவார்கள் என  எதிர்பார்ப்பதாக  செய்தியாளர்களிடம் பேசிய Francois Legault  கூறினார்

இந்த நிலையில் McGill பல்கலைக்கழக நிலை குறித்து மதிப்பீடு செய்து வருவதாக Montreal  காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்

இதுவரை இந்த போராட்டம் அமைதியாக இருந்ததாகவும், அதில் உடனடியாக காவல்துறை அல்லது நகரம் தலையிட வேண்டிய தேவை இல்லை எனவும் அவர் கூறுகிறார்.

இஸ்ரேல் ஆதரவு, பாலஸ்தீனிய ஆதரவு ஆதரவாளர்கள் McGill பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலின் இருபுறமும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை வியாழக்கிழமை (02) நடத்தினர்.

 

Related posts

தற்காலிக உடன்பாட்டுக்கு LCBO தொழிலாளர்கள் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

முதல் குடியின நிலத்தில் வலதுசாரி தீவிரவாதிகள் நடத்திய போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்!

Lankathas Pathmanathan

கட்சித் தலைவி மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை இரத்து செய்யும் பசுமைக் கட்சி!

Gaya Raja

Leave a Comment