December 12, 2024
தேசியம்
செய்திகள்

$70 மில்லியன் Lotto Max அதிஷ்டலாப சீட்டு Albertaவில் கொள்வனவு

70 மில்லியன் டொலர் Lotto Max அதிஷ்டலாப சீட்டு Alberta மாகாணத்தில் கொள்வனவு செய்யப்பட்டது.

செவ்வாய்க்கிழமை (16) அதிர்ஷ்டம் பார்க்கப்பட்ட Lotto Max அதிஷ்டலாப சீட்டு Alberta மாகாணத்தில் கொள்வனவு செய்யப்பட்டது.

Lotto Max இல் வெற்றிபெறும் அதிஷ்டலாப சீட்டு ஒன்று மாகாணத்தில் விற்பனையாகியதாக கூறப்படுகிறது

ஆனாலும் வெற்றியாளர்களின் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இரண்டாம் பரிசுக்கான  அதிஷ்டலாப சீட்டு Calgary நகரில் விற்பனையாகியுள்ளது.

இதன் வெற்றியாளர் 284,899.70 டொலர் பண பரிசு பெறுவார்.

செவ்வாய்க்கிழமை அதிர்ஷ்டம் பார்க்கப்பட்டதில் ஒரு Maxmillion பரிசு மட்டுமே வழங்கப்பட்டது.

இது Ontarioவில் இரண்டு கொள்வனவாளர்களினால் பகிரப்படும்.

இவர்கள் ஒவ்வொருவரும் 500,000 டொலர்களை பெறுவார்கள்.

Related posts

சிரிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடியர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் நாடு திரும்பினர் !

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 27ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை (English version below)

thesiyam

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment