தேசியம்
செய்திகள்

கனடாவுடனான நில எல்லை பயண கட்டுப்பாடுகளை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கும் அமெரிக்கா!

கனடாவுடனான நில எல்லை பயண கட்டுப்பாடுகளை August மாதம் 21ஆம் திகதி வரை அமெரிக்கா நீட்டிக்கிறது.

August மாதம் 9ஆம் திகதி முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கும் என கனேடிய மத்திய அரசு திங்களன்று அறிவித்த நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவு வெளியானது.

பயண நடவடிக்கைகளை எளிதாக்க COVID பரிமாற்ற அச்சுறுத்தல் மிக அதிகமாக உள்ளது என அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் March மாதம் முதல் நடைமுறையில் உள்ள எல்லைக் கட்டுப்பாடுகளை புதுப்பிக்கும் அமெரிக்காவின் நோக்கம் குறித்து அறிவுறுத்தப்பட்டதாக கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் Bill Blair செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

அமெரிக்கா தனது எல்லை கட்டுப்பாடுகளை எவ்வாறு தளர்த்துகிறது என்பதை கனடா ஆணையிடாது என கனேடிய பிரதமர் Justin Trudeau நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontario Science Centre மூடப்படுகிறது!

Lankathas Pathmanathan

Tel Aviv செல்லும் Air Canada விமான சேவை இரத்து!

Lankathas Pathmanathan

கனடாவிற்கான ரஷ்ய தூதுவர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்: அமைச்சர் Joly

Lankathas Pathmanathan

Leave a Comment