December 12, 2024
தேசியம்
செய்திகள்

Winnipeg காவல்துறையால் மாணவர் சுட்டுக் கொலை

Winnipeg காவல்துறையால் புத்தாண்டிற்கு முன் தினம் வெளிநாட்டில் இருந்து கனடாவில் கல்வி கற்க வந்த மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் 19 வயதான Afolabi Stephen Opaso என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நைஜீரியாவைச் சேர்ந்த இவர் Manitoba பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது குடும்பத்திற்கு உதவும் Winnipeg வழக்கறிஞர் Jean-René-Dominique Kwilu இந்த தகவலை உறுதிப்படுத்தினார்

December 31 மதியம் 2:20 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது.

இந்த சம்பவம் குறித்து Manitobaவின் சுயாதீன புலனாய்வுப் பிரிவுக்கு (Independent Investigation Unit of Manitoba – IIU) Winnipeg  காவல்துறையினர் அறிவித்தனர்.

Related posts

வேலைவாய்ப்பு காப்பீடு பெறும் கனடியர்கள் எண்ணிக்கை குறைந்தது!

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடு முயற்சி குறித்து NDP தலைவர் பிரதமருக்கு கடிதம்

Lankathas Pathmanathan

2,700 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை, முதியவர்கள் இறப்பதை தடுப்பூசியால் Ontario தவிர்த்தது!

Gaya Raja

Leave a Comment