September 10, 2026
தேசியம்
செய்திகள்

P.E.I. இளைஞர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இருவர் கைது

Prince Edward Island இளைஞர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

17 வயது இளைஞன் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக Prince Edward Island RCMP தெரிவித்துள்ளது.

காணாமல் போன இளைஞர் 17 வயதான Tyson Blair MacDonald என அடையாளம் காணப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை (19) மாலை கைது செய்யப்பட்டதாக RCMP தெரிவித்தது.

செவ்வாய் அதிகாலையில், மனித எச்சங்களை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கண்டுபிடித்த எச்சங்களை அடையாளம் காண மாகாண மரண விசாரணை அதிகாரி காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

Related posts

புதிய வீடுகளுக்குக்கான முழுமையான HST தள்ளுபடி?

Lankathas Pathmanathan

ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறைகளை அரசாங்கம் கண்டிக்கிறது: பிரதமர் Trudeau!

Gaya Raja

எதிர்ப்பு முற்றுகை போராட்டங்கள் பாதுகாப்பற்றவை – குழப்பமானவை!

Lankathas Pathmanathan

Leave a Comment