தேசியம்
செய்திகள்

Ontario Liberal கட்சி தலைவர் அடுத்த வாரம் தெரிவு

Ontario மாகாண Liberal கட்சி தனது புதிய தலைவரை தெரிவு செய்வதற்கு அடுத்த வாரம் வாக்களிக்கிறது

Ontario Liberal கட்சியின் 80,000 உறுப்பினர்கள் விரைவில் தங்களின் புதிய தலைவரை November 25, 26ஆம் திகதி தேர்ந்தெடுப்பார்கள்.

இந்த இரண்டு தினங்களும் நடைபெறும் வாக்களிப்பை தொடர்ந்து December மாதம் 2ஆம் திகதி புதிய தலைவர் அறிவிக்கப்படுவார்.

இந்த தேர்தலில் மொத்தம் நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Mississauga நகர முதல்வர் Bonnie Crombie, Toronto நாடாளுமன்ற உறுப்பினர் Nate Erskine-Smith, Kingston மாகாண சபை உறுப்பினர் Ted Hsu, Ottawa நாடாளுமன்ற உறுப்பினர் Yasir Naqvi ஆகியோர் இந்த பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

Ontario மாகாண Liberal கட்சியின் தலைமை பதவியில் இருந்து Del Duca கடந்த மாகாண சபை தேர்தலை தொடர்ந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட பிரதான அமைப்பாளர் பிணையில் விடுதலை

Lankathas Pathmanathan

Scarborough துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – இருவர் காயம்!

Lankathas Pathmanathan

கறுப்பு ஜூலையில் உயிர் தப்பியர்வர்களின் அனுபவங்கள் வெறும் கடந்த காலக் கதைகள் அல்ல: விஜய் தணிகாசலம்

Lankathas Pathmanathan

Leave a Comment