September 13, 2026
தேசியம்
செய்திகள்

Mississauga வாசிகளுக்கு துரோகம் இழைக்கும் Bonnie Crombie?

Ontario மாகாண Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் Mississauga நகர முதல்வரின் முடிவை Ontario முதல்வர் விமர்சித்துள்ளார்.

63 வயதான Mississauga நகர முதல்வர் Bonnie Crombie, Ontario Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட விரைவில் தனது பெயரை முறையாகப் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இவரது இந்த முடிவை Ontario முதல்வர் Doug Ford விமர்சித்துள்ளார்.

Bonnie Crombie எடுத்துள்ள இந்த முடிவு Mississauga வாசிகளுக்கு இழைக்கும் துரோகம் என Doug Ford புதன்கிழமை (24) விமர்ச்சித்தார்.

தலைமை பதவிக்கு போட்டியிடும் வேளையில் நகரபிதா பதவியில் இருந்து விலகப் போவதில்லை என Bonnie Crombie தெரிவித்திருந்தார்.

Mississauga  நகரின் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை செய்துவரும் நிலையில் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னிலைப்படுத்தும் முடிவை Bonnie Crombie எடுத்துள்ளதாக Doug Ford தெரிவித்தார்.

Peel பிராந்தியத்தை Ontario மாகாண அரசாங்கம் கலைப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவின் பெரும் பகுதிகளில் தொடரும் வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

கனேடிய தேர்தலில் அமெரிக்க அரசியல் தலைவர்களின் ஆதரவு!

Gaya Raja

25 சதவீதமானவர்கள் COVID தடுப்பூசியை பெற்றுள்ளனர்

Gaya Raja

Leave a Comment