தேசியம்
செய்திகள்

மீண்டும் அரசாங்கத்தில் இணையும் Han Dong?

சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong விரும்பினால் Liberal அரசாங்கத்தில் மீண்டும் இணையலாம் என பிரதமர் தெரிவித்தார்.

இரண்டு கனடியர்களை விடுவிப்பது Conservative கட்சிக்கும் நன்மையாக அமையும் என 2021ஆம் ஆண்டில் Han Dong சீன தூதர் ஒருவரிடம் கூறியதாக ஊடக செய்தி ஒன்று வெளியானது.

தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கடந்த March மாதம் அவர் அரசாங்கக் குழுவிலிருந்து விலகி இருந்தார்.

Han Dong மீதான குற்றச்சாட்டு தவறானது என கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட David Johnston  செவ்வாய்க்கிழமை (23) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு Han Dong மீது பாதகமான விளைவை ஏற்படுத்தியது எனவும் அந்த அறிக்கை தெரிவித்தது.

இந்த நிலையில் Han Dong மீண்டும் Liberal அரசாங்கத்துடன் இணைய விரும்புகிறாரா என்பது குறித்து உரையாட ஆர்வமாக உள்ளதாக பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (24) தெரிவித்தார்.

மீண்டும் Liberal அரசாங்கத்துடன் இணைந்து நாடாளுமன்றத்தில் செயல்பட விரும்புவதாக Han Dong தெரிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்க ஜனாதிபதி மார்ச் மாதம் கனடாவிற்கு விஜயம்

Lankathas Pathmanathan

Ontarioவில் monkeypox பரவல் கடந்த July மாதம் உச்சத்தை எட்டியது

Lankathas Pathmanathan

40 மில்லியனை தாண்டியது கனடிய மக்கள் தொகை

Lankathas Pathmanathan

Leave a Comment