தேசியம்
செய்திகள்

சூடானில் இருந்து கனேடியர்களை வெளியேற்றும் இரண்டு கனடிய விமானங்கள்

சூடானில் இருந்து கனேடியர்களை வெளியேற்றும் இரண்டு கனடிய விமானங்கள் வியாழக்கிழமை (27) புறப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

இந்த விமானங்களில் மொத்தம் 118 பேர் பயணித்துள்ளனர்.

இவர்களில் கனடியர்கள் தவிர, நட்பு நாடுகளின் குடிமக்களும் அடங்குகின்றனர்.

அடுத்த சில நாட்களில் மேலதிகமான விமானங்களில் கனடியர்களை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

அந்த பிராந்தியத்தில் உள்ள மேலும் இரண்டு விமானங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அனிதா ஆனந்த் தெரிவித்தார்.

180க்கும் மேற்பட்ட கனேடியர்கள் இதுவரை சூடானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

கனடியர்களை வெளியேற்றும் முயற்சிகளில் 200 கனடிய இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சூடானில் 1,800 கனேடியர்கள் உள்ளதாக புதன்கிழமை (26) மாலை வரை பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் 700 பேர் வரை நாட்டை விட்டு வெளியேற கனடிய அரசாங்கத்தின் உதவியை கோரியுள்ளனர்.

Related posts

மற்றுமொரு New Brunswick அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Justin Trudeau அரசாங்கம் வீழ்ச்சியடைய வேண்டும்: Quebec முதல்வர்

Lankathas Pathmanathan

தமிழ் சமூக மைய கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment