தேசியம்
செய்திகள்

வாகன விபத்தில் மரணமடைந்த RCMP அதிகாரியின் இறுதி சடங்கு

வாகன விபத்தில் மரணமடைந்த Alberta மாகாண RCMP அதிகாரியின் இறுதி சடங்கு வியாழக்கிழமை (20) நடைபெற்றது.

32 வயதான Constable Harvinder Singh Dhami என்ற RCMP அதிகாரி Edmonton நகருக்கு வடகிழக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் மரணமடைந்தார்.

April மாதம் 10ஆம் திகதி அதிகாலை அவரது வாகனம் தடுப்புச் சுவரில் மோதியதில் நிகழ்ந்த விபத்தில் அவர் மரணமடைந்தார்.

மற்றொரு RCMP அதிகாரிக்கு உதவ சென்றபோது, அதிகாலை 2 மணியளவில் அவரது வாகனம் தடுப்புச் சுவரில் மோதியது.

இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்தில் மரணமடைந்தார்.

வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி சடங்கில் மரணமடைந்த RCMP அதிகாரியை அவரது மனைவி, சகோதரர், தாய், நண்பர்கள் என பலரும் நினைவு கூர்ந்தனர்.

Related posts

Ontarioவில் கடந்த வாரம் 96 COVID மரணங்கள் பதிவு

Lankathas Pathmanathan

Ontarioவின் சுகாதார அமைச்சர்தடுப்பூசி பெறுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு!

Gaya Raja

18 ஆயிரம் பொதுத்துறை ஊழியர்களுக்கு பணி நீக்க அறிவித்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment