February 16, 2025
தேசியம்
செய்திகள்

Pearson விமான நிலையத்தில் 20 மில்லியன் டொலர் கொள்ளை

Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்ந்த 20 மில்லியன் டொலர் கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் விவரம் வெளியிட்டனர்.

தங்கம் உட்பட, அதிக மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Pearson சர்வதேச விமான நிலையத்தில் ஒரு விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட பின்னர் இந்த திருட்டு நிகழ்ந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை (17) இந்தத் திருட்டு இடம்பெற்றதாக Peel பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் இதுவரை கைதுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

அதேவேளை சந்தேக நபர்கள் குறித்த எந்த தகவலையும் காவல்துறையினர் வெளியிடவில்லை.

Related posts

B.C. விபத்தில் நால்வர் பலி

Lankathas Pathmanathan

எதிர்வரும் 7 ஆம் திகதி மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan

சரக்கு புகையிரத வண்டி தீப்பிடித்தது

Lankathas Pathmanathan

Leave a Comment