September 27, 2026
தேசியம்
செய்திகள்

வரவு செலவுத் திட்டத்தில் கனேடியர்களுக்கு நேரடியாக உதவும் திட்டங்கள் அடங்கும்

2023 வரவு செலவுத் திட்டத்தில் கனேடியர்களுக்கு நேரடியாக உதவும் திட்டங்கள் அடங்கும் என பிரதமர் தெரிவித்தார்.

துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland எதிர்வரும் 28 ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.

கனடியர்களின் தற்போதைய வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை இந்த வரவு செலவு திட்டம் கொண்டிருக்கும் என பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (15) கூறினார்.

மாகாணங்களுடனும் பிரதேசங்களுடனும் சமீபத்தில் இறுதி செய்யப்பட்ட பல பில்லியன் டொலர்கள் கொண்ட சுகாதார பாதுகாப்பு நிதி ஒப்பந்தங்களும் இந்த வரவு செலவு திட்டத்தில் அடங்கும் என பிரதமர் கூறினார்.

இந்த வரவு செலவு திட்டத்தில் NDP கோரும் திட்டங்களையும் உள்ளடக்க வேண்டிய தேவை சிறுபான்மை Liberal அரசாங்கத்திற்கு உள்ளது.

Liberal – NDP ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நிலுவையில் உள்ள திட்டங்களையும்  இந்த வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்க NDP தலைவர் Jagmeet Singh வலியுறுத்துகின்றார்.

அதேவேளை வரிகளை குறைக்க Conservative தலைவர் Pierre Poilievre  மத்திய அரசை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.

Related posts

புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமரினால் நியமனம்

Lankathas Pathmanathan

தட்டம்மை நோய் பரவல் குறித்து சுகாதார அமைச்சர் கவலை

Lankathas Pathmanathan

இந்தியாவிற்கான விமான சேவைகளை விரிவுபடுத்தும் Air Canada!

Lankathas Pathmanathan

Leave a Comment