September 27, 2026
தேசியம்
செய்திகள்

கடந்த மாதம் குறைவடைந்த வீடு விற்பனை

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் February மாதம் கனடிய வீடு விற்பனை குறைந்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் February மாதத்தில் வீடுகளின் விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளதாக கனேடிய Real Estate சங்கம் தெரிவித்துள்ளது.

2018, 2019 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டதை ஒப்பிடும் வகையில் கடந்த February மாத வீடு விற்பனை இருந்தது என கனடிய Real Estate சங்கம் தெரிவித்துள்ளது.

February 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, சராசரி விற்பனை விலை 18.9 சதவீதம் சரிவை பதிவு செய்த நிலையில், வீடு விற்பனையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

Februaryயில் கனடாவில் சராசரி வீட்டு விலை 662 ஆயிரத்து 437 டொலர்கள் என கூறப்படுகிறது.

அதேவேளை January மாதத்துடன் ஒப்பிடுகையில், February மாதத்தில் வீடு விற்பனை 2.3 சதவீதம் உயர்ந்துள்ளது.

குறிப்பாக Torontoவிலும் Vancouverரிலும்  வீடு விற்பனையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

Related posts

ஒலிம்பிக் பதக்கங்களை கனடாவின் பெண் விளையாட்டு வீரர்களே வென்றனர்!

Gaya Raja

Ukraine-னுக்கு மேலும் இராணுவ உதவிகளை வழங்க கனடா உறுதி

Lankathas Pathmanathan

முன்கூட்டிய தேர்தலுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது: Jagmeet Singh

Lankathas Pathmanathan

Leave a Comment