September 10, 2026
தேசியம்
செய்திகள்

பதவி விலகும் John Toryயின் முடிவு சரியானது: துணைப் பிரதமர் Chrystia Freeland

Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து விலகும் John Toryயின் முடிவு சரியானது என துணைப் பிரதமர் Chrystia Freeland தெரிவித்தார்.

COVID தொற்று காலத்தில் தனது அலுவலக ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை ஏற்றுக் கொண்ட பின்னர் நகர முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக John Tory கடந்த வெள்ளிக்கிழமை (10) அறிவித்தார்.

இது சரியான, அவசியமான முடிவு என Toronto நகரின்  University-Rosedale தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Chrystia Freeland  கூறினார்.

அதேவேளை John Toryயை பதவியில் இருந்து விலக வேண்டாம் என கோரிய அரசியல் பிரமுகர்களில் Chrystia Freelandஉம் ஒருவர் என வெளியான செய்திகளை அவர் மறுத்தார்.

Related posts

கனடாவின் வர்த்தக முறைகேடுகள்? – பட்டியல் வெளியிட்ட வெள்ளை மாளிகை!

Lankathas Pathmanathan

60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனடியர்கள் Mexico-வில்?

Lankathas Pathmanathan

காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம்!

Lankathas Pathmanathan

Leave a Comment