தேசியம்
செய்திகள்

மக்களை வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு குறித்து பரிசீலிக்கும் Ontario அமைச்சரவை!

Ontarioவில் மக்களை வீட்டில் முடக்குவதற்கான உத்தரவை வழங்குவது குறித்து அமைச்சரவை பரிசீலித்து வருவதாக தெரியவருகிறது.

இதற்கான கோரிக்கையை மாகாணத்தின் மூன்று தலைமை வைத்தியர்களும் விடுத்துள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. Ontarioவில் மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடும் என செவ்வாய்க்கிழமை முதல்வர் Doug Ford கூறினார்.

Ontarioவில் மாகாண ரீதியில் வீட்டில்முடங்கியிருக்கும் உத்தரவொன்றை அறிவிக்குமாறு Toronto, Peel, Ottawa தலைமை வைத்தியர்கள் அரசாங்கத்தை ஏற்கனவே கோரியிருந்தனர். COVID தொற்றின் புதிய திரிபை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த உத்தரவை பிறப்பிக்குமாறு வைத்தியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை அடங்கிய கடிதமொன்றை Ontarioவின் தலைமை மருத்துவ அதிகாரிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ளனர். நான்கு வார கால முழு முடக்கம் ஒன்று Ontarioவில் அறிவிக்கப்பட்டாலும் தொற்றின் பரவலை தடுக்க வலுவான நடவடிக்கைகள் தேவை என மருத்துவர்கள் இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனாலும் மாகாண அரசாங்கத்தின் மேலதிக கட்டுப்பாடு உத்தரவு மாகாண ரீதியில் விடுக்கபடுமா அல்லது பிராந்திய அளவில் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில் Toronto, Peel, York ஆகிய  பகுதிகளில்  மேலதிக  கட்டுப்பாடுகள் விடுதிக்கப்படலாம் என முதல்வர் Ford தெரிவித்திருந்தார்.

Ontarioவில் தற்போது  நான்கு வார கால முழு முடக்கம் அமுலில் உள்ளது. ஆனாலும் மக்களை வீட்டில் முடக்குவதற்கான உத்தரவு உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related posts

கனடிய அரசாங்கம் மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் 675 ஆயிரம் பேர் வாக்களிக்கலாம்

Lankathas Pathmanathan

Ontarioவை மீளத் திறக்கும் திட்டம் அறிவிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!